மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை

- Advertisement -

ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்காக  தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் மற்றும் இடைநிலை மனுதாரர்களின் சமர்ப்பணங்கள் இன்று நிறைவடைந்த நிலையிலேயே, நாளைய தினம் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

பொதுத் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் இன்று 10ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

குறித்த மனுக்கள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மீண்டும் இன்று பரிசீலனைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz