மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் ஆனைக்குழு உறுப்பினர் ஹூல் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

- Advertisement -

தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் அரசாங்கத்துக்கு எதிராக ஒரே மனதுடன் செயற்பட்டு  வருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜூ எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.,

இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் கூறினார்.

- Advertisement -

“தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக ஒரே மனதுடன் செயற்பட்டு வருகின்றார்’.அவர் தொடர்ச்சியாக அரசாங்கம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றார்,அது இரகசியமல்ல அதனை முழு நாடும் அறியும்.,பத்திரிகைகள் மற்றும் பல ஊடகங்கள் வாயிலாக அவர் அரசாங்கத்துக்கு எதிராக பல விடயங்களை புலப்படுத்தியு்ளளனர்,ஆனால் அதற்கான பொறுப்பை முழு ஆணைக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும்,ஒரு ஆணைக்குழுவில் மூவர் இருக்கின்றார்கள் என்றால் அவர்களுள் பெரும்பான்மையினரின் முடிவாக அமையும் ஆகவே ஆணைக்குழுவில் இரண்டு கருத்துக்களை முன்வைக்க முடியாது,அதற்கு சட்டத்திலும் இடமில்லை.”

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் ரத்னஜீவன் ஹூல் தொடர்பில் கேள்வியெழுப்பினார்

“ரத்னஜீவன் ஹூல் தேர்தல்களை விரும்புவதில்லை,அவர் இங்கு இருந்து கொண்டு தமது தங்குமிடம் குறித்து போலியான தகவல்களை கூறி தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிதியை பெற்றுள்ளார்,இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு மோசடி எனும்  பெயரில் நேற்று ஊடகமொன்றில் செய்தி வௌியாகியிருந்தது,அவர் பேராசிரியாராக இருந்தாலும் இந்த விடயத்தை சிறந்ததென்று கூற முடியாதே ”

இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ எல் பீரிஸ் இவ்வாறு பதிலளித்திருந்தார்,

“ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தமது கடமைகளுக்கு முரணாக நடந்துக் கொள்ளக’ கூடாது ,அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் பக்கசார்பாக நடந்து கொள்ளும் பட்சத்தில் மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கை அற்றுப் போகின்றது,”

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற போக்குவரத்துக் கொடுப்பனவை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்னஜீவன் ஹுல் முறையற்ற விதத்தில் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு, தனக்கு 350 கிலோமீற்றர் உள்ளதாக கூறி, ரத்னஜீவன் ஹுல் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று  இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.

எனினும், ரத்னஜீவன் ஹுல் கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள வீடொன்றில் இருந்து கொண்டே, தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ரத்னஜீவன் ஹுல் ஐம்பதாயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்று, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வருகை தருவதற்கும், கடந்த வருடத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாகனத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த மாதம் 19 ஆம் திகதி யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்தி, நீர்கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு, ரத்னஜீவன் ஹுல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தந்தமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கம்பஹாவில் ஏனைய தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Developed by: SEOGlitz