மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியின் பெயரைப்பயன்படுத்தி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மர்மப் பொதி

- Advertisement -

ஜனாதிபதி  கோட்டாபய  ராஜபக்ஸவின்   பெயரினை பயன்படுத்தி  சீனாவில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையினூடாக பொதியொன்றை கொண்டு வந்த  இராணுவப் பாதுகாப்பு அதிகாரியொருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட பணிப்பின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,

- Advertisement -

சீனாவின் ஷங்ஹாய் விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதிக்கு பொதியொன்றை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக  குறித்த நபர் ஶ்ரீலங்கா விமான சேவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஷங்காய் விமான நிலையத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களிடம் கையளிக்கப்பட்ட பொதியினை அவர்களை இலங்கையின் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்,

அதன் பின்னர் பொதியிடல் பிரிவிடம் இந்த பொதி கையளிக்கப்பதுடன் அதன் பின்னர் குறித்த பாதுகாப்பு அதிகாரி இந்த பொதியை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இதேவேளை இதற்கு முன்னர் ஜனாதிபதியின் இலச்சினைகளை பயன்படுத்தி போலி கடிதங்களை தயாரித்த நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்….

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...

பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலதிட்டங்கள் குறித்து...

கண்டி பூவெலிக்கடை கட்டட விவகாரம்: உரிமையாளருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட கண்டி – பூவெலிக்கடை பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...

முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் வழி!

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை மனம் உருகி 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நம்பகமிக்க உண்மை. இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி...

கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

தமது கடமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, கிராம உத்தியோகத்தர்களின் சங்கத் தலைவர்...

Developed by: SEOGlitz