மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் தாக்குதல்களை மேற்கொள்ள கூடாது : அமைச்சர் பந்துல!

- Advertisement -

கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸாரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

- Advertisement -

“நேற்று முன்தினம் முன்னிலை சோசலிச கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் என கூறப்படும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்து அதற்கான தடையுத்தரவைப் பெற்றுள்ளனர். அதனை அவர்களுக்கு வழங்கிய போதிலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதன் பின்னர் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தே பொலிஸார் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரின் இந்த செயற்பாடுகளை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவையின் எந்தவொரு உறுப்பினருமோ ஏற்றுக் கொள்ளவில்லை. நடந்த சம்பவம் தொடர்பில் ஒரு அரசாங்கம் என்ற வகையில் கவலையடைகிறோம். இந்த சம்பவமானது பதிலுக்கு பதில் நடவடிக்கையாகவே இடம்பெற்றுள்ளதே தவிர, அறிவுறுத்தலுக்கு அமைவாக கட்டுப்படுத்தும் நோக்கில் இடம்பெறவில்லை.

எனினும் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறானதொரு சம்பவம் இனி நடைபெறக் கூடாது என ஜனாதிபதி பணித்துள்ளார். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் பொலிஸார் தாக்குதலில் ஈடுபடக் கூடாது எனவும் வேறு வழிகளிலேயே அவர்களை கலைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அமுலாக்கப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் அவர்களை 14 நாட்கள் அல்லது 21 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது குறித்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்ட பொலிஸாரை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz