மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இன்று – பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் சாத்தியம்

- Advertisement -

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாக உள்ளது.

மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களின் பிரகாரம் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளது.

- Advertisement -

தேர்தல் நடத்துவதற்கான சுகாதார அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் பரீட்சார்த்த தேர்தல்  நடாத்தப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேச செயலக பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் பரீட்சார்த்த  தேர்தல் நடைபெற்றுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிகளின் பிரகாரம் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்கான சிறப்பு ஒத்திகைத் தேர்தலாக இது நடைபெற்றுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களை  எவ்வாறு அமைப்பது, வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நேரம் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

குறித்த  பரீட்சார்த்த  தேர்தலில் 200க்கும் அதிகமான வாக்காளர்கள் கலந்துகொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த பரீட்சார்த்த தேர்தலின் மூலம் பெறப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இன்று  இடம்பெறவுள்ளது.

இதன்போது பொதுத் தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தேர்தல் ஆணைக்குழுவினால்  இறுதித் தீர்மானம் எட்டப்படுமாயின்  பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான திகதி, வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விருப்பு இலக்கங்களை அறிவிக்கும் வர்த்தமானி  இன்று நள்ளிரவு  வெளியிடப்படும் என  தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

Developed by: SEOGlitz