தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹுலின் சர்ச்சைக்குள்ளான கருத்து தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமினால் இன்றைய தினம் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும், இதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது எனவும் ரத்னஜீவன் ஹுல் குறிப்பிட்டிருந்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் அவர் இதனைக் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே, குறித்த கருத்து எதிராக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவம் இன்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.