மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது நிர்வாக அமைச்சு விடுக்கும் விசேட கோரிக்கை

- Advertisement -

2020 ஆம் ஆண்டுக்கான வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில்மதுபான சாலைகள், பல்பொருள் அங்காடி நிறுவனங்கள், மாமிச விற்பனை நிலையங்கள் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், ஊடகத் துறை அமைச்சின் செயலாளர், புத்தசாசனம், கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 07 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகள் வெசாக் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அரசாங்கத்தினால் வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான தகவல்

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இன்று மாலை 10 மணிமுதல் திங்கட்கிழமை காலை 5 மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். அத்துடன் கம்பஹா மாவட்டம் முழுவதும்...

3 ஆவது இடத்திற்கு முன்னேறுமா Kolkata Knight Riders!

IPL தொடரின் 39ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது. Kolkata Knight Riders மற்றும் Royal Challengers Bangalore அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த...

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி இளைஞர் ஒருவருக்கு பாரிய காயத்தை ஏற்படுத்தியமை...

ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதிப்புக்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குறித்த வழக்கு, சிசிர...

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20 ஆம் திருத்தத்தின் இராண்டாம் வாசிப்பு- முழு விபரம் உள்ளே!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு நீதியமைச்சர் அலிசப்ரியினால் இன்று காலை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இருபதாம் திருத்த...

Developed by: SEOGlitz