மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மீண்டும் அமுலாகும் ஊரடங்கு சட்டம்

- Advertisement -

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு  தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என  அறிவிக்கப்ட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனைய மாவட்டங்களில் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டு  18 ஆம் திகதி  காலை 5 மணிக்கு ஊரடங்கு மீண்டும் தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும் மீண்டும் 18 ஆம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, 23 மாவட்டங்களிலும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த 11 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் மக்களின் அன்றாட வாழ்க்கையினை  இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடைமுறை எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு 08 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி வழமை போல அமுலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு தொடர்பான அறிவுறுத்தல்களில் எவ்வித மாற்றங்களும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...

அங்கஜன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், உரிய திகதியில் விண்ணப்பங்கள் அனுப்பமுடியாது...