மெய்ப்பொருள் காண்பது அறிவு

வருடாந்தம் உயிரிழக்கும் 20 ஆயிரம் இலங்கையர்கள் – காரணம் இதுதான்!

- Advertisement -

புகைப்பிடிக்கும் பழக்கத்தின் காரணமாக, வருடாந்தம் 20 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மே 31ஆம் திகதியாகிய இன்றைய தினம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் கொண்டாடப்படுவதையொட்டி வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், புகைப்பிடிக்கும் பழக்கத்தின் காரணமாக, நாளாந்தம் 55 பேர் உயிரிழக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச ரீதியில், புகைப்பழக்கத்தினால், வருடாந்தம் 8 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அதேவேளை, அவர்களில் 9 இலட்சம் பேர் இரண்டாம் நிலை புகைத்தலினால் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, இளைஞர்களும் சிறுவர்களும் இலக்குவைக்கப்படுவதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

இதற்கிணங்க, ‘இளைஞர்களை புகையிலை நிறுவனத்தின் பிழையான வழிகாட்டலில் இருந்து பாதுகாத்து, அவர்களின் பாவனையை தடுப்போம்’ எனும் தொனிப் பொருளில், 2020ஆம் ஆண்டிற்கான, சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் கொண்டாடப்படுவதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைக் கட்டமைப்பில் இலங்கை உள்ளிட்ட 168 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அத்துடன், சிறுவயதில் இருந்து பிள்ளைகளின் மனதில் புகைத்தல் தொடர்பான சாதகமான சிந்தனையொன்றை உருவாக்குவதற்காக, விற்பனை நிறுவனங்களினால் பல்வேறு நுணுக்கமான முறைகள் கையாளப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களும், சிறுவர்களும், போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தவிர்ப்பதற்காக, 6 பரிந்துரைகள், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

புகைத்தல் பொருட்களின் தனி விற்பனையை தடை செய்தல், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீற்றர் வரை புகைத்தல் பொருள் விற்பனையை தடை செய்தல், புகைத்தல் பொருட்களுக்கு அதிக பட்ச விலையை நிர்ணயித்தல், வெற்றுப் பொதியிடல் முறைமை, தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுத்தல் மற்றும் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்தல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புகைத்தலினால் எமது சமூகம் பாதிப்படைவதைத் தடுக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்பதை எமது கெப்பிட்டல் வானொலி சார்பாகவும் நாம் வலியுறுத்துகின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் நீக்கம் : யாழ். அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்க நடவடிக்கை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த...

புல்மோட்டை பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு!

திருகோணமலை  - புல்மோட்டை ஒட்டங்குளத்து சந்தியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியின் சில இடங்களில்,  சுற்றி வர அமைக்கப்பட்ட வேலிகளை காட்டு  யானை சேதமாக்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில்...

பிரித்தானியாவின் Wales பகுதி இரண்டு வார காலத்திற்கு முடக்கம்!

பிரித்தானியாவின் Wales பகுதி, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வரை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்...

தொழிற்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட அவதானம்!

தொழிற்சாலைகளில் சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில்,  முதலீட்டு சபை உன்னிப்பாக கண்காணிக்கும் என என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு...

நாடாளுமன்றத்தில் சஜித் – பவித்ரா வாக்குவாதம்!

அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள், நாடாளுமன்றத்தில் மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். சுகாதார நடைமுறைகள் உள்ளடக்கப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல், கடந்த 15...

Developed by: SEOGlitz