மெய்ப்பொருள் காண்பது அறிவு

கணினிகளை இலக்குவைத்து புதிய சைபர் தாக்குதல் -மக்களுக்கு எச்சரிக்கை!

- Advertisement -

சர்வதேச ரீதியில், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கணினிகளை இலக்குவைத்து புதிய சைபர் தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசரநிலை பாதுகாப்பு குழு இந்த விடயம் குறித்து அதி உயர் சிவப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

- Advertisement -

குறித்த வைரஸானது சோடினோகிபி (Sodinokibi) அல்லது ஆர்-எவில் (REvil) எனப்படும் மேம்படுத்தப்பட்ட கணினி வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் கணினியொன்றைத் தாக்கிய பின்னர், கணினியில் உள்ள கோப்புகளை, முடக்குவதுடன், அதனை மீள பயன்படுத்த அனுமதிக்க பணத்தை கோருவதாகவும், இலங்கை கணினி அவசரநிலை பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

இதன் பின்னர், பாதிக்கப்பட்ட மின்னஞ்சல் இணைப்புகள், டொரண்ட் இணையத்தளங்கள், போலி நிதி ரீதியான தகவல்கள் மற்றும் வைரஸ் இணையத்தள விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரப்பப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், சட்டத்துறை நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து பல்வேறு தாக்குதல்கள், இந்த சோடினோகிபி (Sodinokibi) அல்லது ஆர்-எவில் (REvil) எனப்படும் வைரஸினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சந்தேகத்திற்கிடமான மூலங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கவோ அந்த இணைப்புகளை சொடுக்கவோ வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வைரஸ் தாக்குதலில் இருந்து கோப்புகளை மீட்பதற்கு பணம் செலுத்துவதனால், குறித்த கோப்புகள் மீள கிடைக்கும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, தமது கணினிகளில் உள்ள முக்கியமான கோப்புகளை, தொடர்ச்சியாக பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு, இலங்கை கணினி அவசரநிலை பாதுகாப்பு குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

MCC உடன்படிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது – சட்டமா அதிபர்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திட முற்பட்ட எம் சி சி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு முரானாணது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலாளருக்கு சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக...

தனது ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அலெக்ஸி நவால்னி கோரிக்கை!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய  அவர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz