மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடையாள அட்டை நடைமுறைக்கு முடிவு?

- Advertisement -

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த, அடையாள அட்டை இறுதி இலக்கத்தைப் பின்பற்றி அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபடும் முறைமை இனி பின்பற்றப்படாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பகுதியளவில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றமையை அடுத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை வழமையான முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் பின்பற்றுவது அத்தியாவசியமானதாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz