மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பான பரிசீலணை ஒத்திவைப்பு!

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் நேற்றையதினம் நான்காவது  நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,  இன்று காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

இதற்கமைய, எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக இன்றும் இடம்பெற்றது.

இந்த அடிப்படை உரிமை மீறல்மனுக்கள் மீதான பரிசீலனை நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மீண்டும் இன்று  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால்அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் புதல்வர் வழக்கறிஞர் சரித குணரத்ன, சமூக செயற்பாட்டாளரான விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவணமுத்துமற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்த அடிப்படைஉரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் ஐந்தாவது  நாளாக  இன்று காலை10 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட நிலையில்  எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz