மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரத்னஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்வியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு

- Advertisement -

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி, தனிமைப்படுத்தல்  ஆலோசனைகளை மீறி தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலுகத்துக்குள் பிரவேசித்திருப்பது  பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது,

ரத்னஜீவன் ஹூல்  மற்றும் அவரது புதல்வியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கம் தமது எதிர்ப்பை வௌியிட்டிருந்தது,

- Advertisement -

இது தொடர்பில் கருத்து வௌியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அதுல டி சில்வா

 

 

இதேவேளை கொரோனா தொற்றினால் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையரை நாட்டிற்கு அழைத்துவரும் திட்டத்திற்கமை  பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி கடந்த 04 ஆம் திகதி  ஶ்ரீலங்கன் விமானசேவை விமானம் மூலம் நாடு திரும்பியிருந்தார்.

இதன் போது நிர்க்கதிக்குள்ளாகியிருந்தவர்களை மீட்டு வந்த ஶ்ரீலங்கன் விமானசேவையின் விமானம் குறித்து அவர் வௌியிட்டிருந்த பதிவு பலரதும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தது,

தாம் டின் மீன் போல அடைக்கப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் தனிமைப்படுத்தல் தொடர்பிலும் அவர் பதிவொன்றை இட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது,

சர்வதேச அனர்த்த நிலைமையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மக்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ள ஶ்ரீலங்கன் விமான சேவை தொடர்பிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி விமர்சித்திருந்தமை பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது,

இந்த எதிர்ப்புக்களையடுத்து அவர் தமது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டக்கராம் கணக்குகளை தற்காலிமாக முடக்கியுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில்  14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் மேலும் 14 நாட்கள் தமது வீடுகளில்  சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில் அவ்வாறு சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடாமல் தனிமைப்படுத்தல் ஆலோசனைகளுக்கு மாறாக நேற்று முன்தினம் ரத்னஜீவன் ஹூல் தமது புதல்வியை ராஜகிரியவில் உள்ள  தேர்தல் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனம் மூலம் இரண்டு நாட்கள் அவர் இவ்வாறு தேர்தல் செயலகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்திற்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் தேர்தல்கள் செயலகத்தின் ஏனைய அதிகாரிகள் தமது எதிர்ப்பை வௌியிட்டிருந்தனர்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின்  அலுவலக வளாகம் முழுமையாக தொற்று நீக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு மாத்திரம்  ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மேலும் மூன்று...

அமரர் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் குறித்த முழு விபரம்!

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மலர்ச்சாலையில் இருந்து அவரது...

160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணம்

கொரியாவில் பணிபுரிகின்ற நிலையில், நாடு திரும்பியிருந்த 160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணித்துள்ளனர். இதற்கமைய, மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்துவருவதற்கான புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம்...

நாட்டின் பல பகுதிகளில் 200மி.மீ மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...