மெய்ப்பொருள் காண்பது அறிவு

5000 ரூபா கொடுப்பனவில் அரசியல் வேண்டாம் – தேர்தல்கள் ஆணைக்குழு

- Advertisement -

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஐயாயிரம் ரூபா வழங்கும் வேலைத் திட்டத்தில் இருந்து பிரதேச மற்றும் கிராமிய அரசியல்வாதிகளை ஒதுக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது,

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுடன் கையொப்பத்துடன் அனுப்பபட்டுள்ள கடிதமொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்ட்டுள்ளது,

- Advertisement -

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளருக்கும் இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன,

தற்போது 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் இந்த செயற்பாடு ஆளுந்தரப்பின் கட்சிகளை ஊக்குவிக்கும் செயற்பாடாக மாறியுள்ளதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்,

இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதின் ஊடாக எந்தவொரு அரசியல் கட்சியினதோ அல்லது வேட்பாளரினதோ பிரசாரத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு குறித்த கொடுப்பனவினை வழங்கவேண்டுமா என சிந்திக்குமாறும்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கோரியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...