மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி செயற்பட்ட ரட்ணஜீவன் ஹுல் – ஆணைக்குழுவுக்கு வரத் தடை?

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் செயற்பட்டுள்ளதாக, இலங்கையின் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுலின் மகள் அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.

- Advertisement -

இவ்வாறு இலங்கை திரும்பும் அனைவரும், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்படுவதுடன், குறித்த காலத்தை நிறைவு செய்த பின்னர் 14 நாட்கள் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.

எனினும், ஹோட்டலொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர், தனது தனிமைப்படுத்தல் காலத்தை 18ஆம் திகதியான நேற்று முன்தினம் நிறைவு செய்திருந்தார்.

இந்த நிலையில், தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடாத அவர், தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த தினமான நேற்று முன்தினமும், சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டிய தினமான நேற்றைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, தனது தந்தை ரட்ணஜீவன் ஹுலுடன் வருகை தந்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்த அனுமதி பெற்றிருந்த மகளை, யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சொந்தமான வாகனத்தில், கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்துக்கு இரண்டு நாட்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் அழைத்து வந்துள்ளார்.

அத்துடன், இது குறித்த தகவல் அறிந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, மூத்த அதிகாரிகளின் தலையிட்டதன் அடிப்படையில், குறித்த இருவரும் தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் தனது மகளை, 14 நாள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைத்துவந்ததன் மூலம், தேர்தல்கள் ஆணைக்குழுவக்கு வருகை தரும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் மற்றும் அவரது மகள் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து நேற்று பிற்பகல் வெளியேறியதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழு வளாகம் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாகவும், குறித்த சந்திப்பில் காணொளி மூலமாக பங்கேற்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சிங்கள நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு மட்டுமே உத்தியோகபூர்வ வாகனம் கொடுக்கப்படும் என்றும் வேறு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படும் என்றும், 400 km க்கு அப்பால் வாழும் உறுப்பினர்களுக்கு மேலதிக போக்குவரத்து கொடுப்பனவாக ரூ 50,000/- வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...