மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரத்தினபுரியில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு

- Advertisement -

இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட வேவல்வத்த பிரதேசத்தில் சீரற்ற வானிலை காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவல்வத்த பிரதேசத்திலேயே இன்று பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த மண்சரிவு அனர்த்தம் காரணமாக வேவல்வத்த, பட்டேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அனர்த்தத்தின் போது, சிறுவனும் அவரது தாயாரும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து, வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்த போது, தாயார் தப்பியுள்ளதுடன், குழந்தையை காப்பாற்ற முடியாது போயுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தினால் குறித்த வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், குடும்பத்தினர் உறவினர் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வேவல்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுளை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...