மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி இன்று சக்திவாய்ந்ததாக மாறும்!

- Advertisement -

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது.

அம்பன் என அழைக்கப்படும் இந்த சூறாவளி நேற்று காலை 8.30 அளவில் உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணக்களம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அம்பன் சூறாவளியானது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் அம்பன் சூறாவளியானது சக்திவாய்ந்ததாக மாறுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பன் சூறாவளியானது தற்போது நிலைகொண்டுள்ள பகுதியில் இருந்து, அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் வடக்கு நோக்கி நகருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி அன்று அம்பன் சூறாவளி தனது திசையை மாற்றி மேற்கு வங்காள கரையை நோக்கி பயணிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் கடற்பரப்பில் 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும், சில நேரங்களில் 110 கிலோமீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பன் சூறாவளியின் காரணமாக நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்கு மேலாக காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் 72 மணித்தியாலங்களில், தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும், இதன்போது கடல் சற்று கொந்தளிப்பாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் இடைக்கிடையே காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் கடலலை 2 அல்லது 2.5 மீற்றருக்கு உயர்வடைந்து இருக்குமெனவும், இதனால் கடலலை நிலபரப்பிற்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலையான செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகலை மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹாவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின், கடவத்சதர, அக்மீமன, எல்பிட்டிய, நியகம, நாகொட, தவலம, நெலுவ மற்றும் போப்பே போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட,  அயாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர, புளத்சிங்ஹல, வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க  பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின், கங்கஹல கோரளை மற்றும் தும்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

சச்சின் டெண்டுல்கர் மகனுக்காக என்ன செய்தார் தெரியுமா!

உலகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் Summer time.. And who doesn’t...

ராஜ நாகத்தை குழந்தை போல குளிர்பாட்டும் இளைஞன்: காணொளி உள்ளே!

இந்தியாவில் அதிக விசத்தன்மைக்கொண்ட ராஜ நாகம் ஒன்றை குழந்தையை போல குளிர்ப்பாட்டி விடும் இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த காணொளியை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர் One great survival technique...

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 769 ஆக உயர்வடைந்துள்ளது. இதனடிப்படையில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 15 பேர் குணமடைந்துள்ள நிலையில் 15 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைவாக கொரோனா தொற்றிலிருந்து...

திருநீறு அணிவதன் நோக்கம் !

இந்துக்களின் மகிமை சொல்லும் விடயங்களில் விபூதியும் ஒன்றாகும். இதனை பகவத்கீதையில் யோகம் என்று புகழ்கிறது. நோய் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாகவும் திருநிறு காணப்படுகிறது இதனையே மந்திரமாவது நீறு என்று தொடங்கும் தேவாரம் எடுத்துக்காட்டுகிறது. விபுதியை வடக்கு அல்லது...