மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்வு

- Advertisement -

நாட்டின் 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கு சட்டமானது, இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய  23 மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

23 மாவட்டங்களிலும் இன்று தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 23 ஆம் திகதிவரை வழமையான நடைமுறையில், ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது,

இதற்கமைய இன்று முதல் 23 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 08 மணிக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மீள அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த 11 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்படும் மக்களின் அன்றாட வாழ்க்கையினை இயல்பு நிலைமைக்கு கொண்டுவருவதற்கான நடைமுறை, இன்று முதல் வழமைபோல் மீண்டும் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி ஊடகப்பிரிவு முன்னதாக அறிவித்திருந்த ஊரடங்கு தொடர்பான அறிவுறுத்தல்களில் எவ்வித மாற்றங்களும் இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள்  அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய  தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வெளியில் சென்றுவருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை ஆகிய இன்றைய தினம் 1 மற்றும் 2 ஆகிய அடையாள அட்டை இறுதி இலக்கத்தை கொண்டவர்கள் மாத்திரமே, அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்கு வெளியில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபடுவோர் சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் எனவும், நடந்து செல்லக் கூடிய தூரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு மட்டுமே செல்ல முடியும் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவட்டங்களுக்கிடையிலான இரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

வெளிமாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம்அலை ஏற்பட்டதன் காரணமாக அலுவலக ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனினும், தற்போது...

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

Developed by: SEOGlitz