அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி Joe Biden தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதி அருகாமையில் அடையாளந்தெரியாத குழுவினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரில் பயணித்த நபர்கள் நாடாளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகே காவலில் இருந்த பொலிஸார் மீது காரை மோதச் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இதனிடையே தாக்குதலை நடாத்திய சந்தேக நபர் மீது பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க Capitol கட்டடத்தொகுதி வளாகத்தில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் முன்று மாதங்களின் பின்னர் மீண்டும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த தாக்குதல் பயங்கரவாத செயற்பாடு அல்ல என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.