மெய்ப்பொருள் காண்பது அறிவு

AstraZeneca தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்த அயர்லாந்து நடவடிக்கை!

- Advertisement -

AstraZeneca கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு அயர்லாந்து தடுப்பூசி செயலணி பரிந்துரைத்துள்ளது.

குறித்த கொரோனா தடுப்பூசியின் மூலம் இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனினும், AstraZeneca கொரோனா தடுப்பூசிக்கும், இரத்தம் உறைதலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என இதுவரை கண்டறியப்படவில்லை என, அயர்லாந்து தடுப்பூசி செயலணி தெரிவித்துள்ளது.

அத்துடன், இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அயர்லாந்து தடுப்பூசி செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, oxford-astrazeneca கொரோனா தடுப்பூசி பயன்பாட்டினை நிறுத்துவதற்கு எந்தவிதமான அடிப்படை காரணமும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் ஏற்படும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் astrazeneca கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன.

இந்த நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz