மெய்ப்பொருள் காண்பது அறிவு

AstraZeneca தடுப்பூசியை இடைநிறுத்த எவ்வித காரணங்களும் இல்லை: WHO தெரிவிப்பு!

- Advertisement -

கொவிட் 19 தொற்றுக்கான  AstraZeneca கொரோனா தடுப்பூசி பாவனையினை இடைநிறுத்துவதற்கான எந்தவித  காரணிகளும்  இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நோர்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இரத்த உறைதல்  காரணமாக AstraZeneca தடுப்பூசி பெற்றுக்கொள்வதை இடைநிறுத்தியிருந்த நிலையில்  இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

- Advertisement -

குறித்த தடுப்பூசி இரத்த உறைதலை ஏற்படுத்தும் என்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லையென உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இத்தாலி மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் AstraZeneca கொரோனா தடுப்பூசியினை 2 ஆவது தடவையாக வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தாய்லாந்து மற்றும் Bulgaria ஆகிய நாடுகள் AstraZeneca தடுப்பூசி பாவனையினை தாமதப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும், அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் AstraZeneca தடுப்பூசியினை இடைநிறுத்துவதற்கான எவ்வித காரணங்களும் இல்லை என தெரிவித்துள்ளன.

இதேவேளை jhonson & jhonson கொவிட் 19 தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz