மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் இன்று முன்னிலையாகி உள்ளார்.
இதனைதொடர்ந்து, ஆங் சான் சூகி உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது வழங்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டு இராணுவம் கடந்த பெப்பிரவரி மாதம் முதலாம் திகதி ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
குறித்த போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் மியன்மார் பொலிஸார் கடந்த சில நாட்களாக பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்தப் போராட்டங்களில் சுமார் 18 பேர் இதுவரை உயிரிழந்திருக்கலாமென ஐ நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.