பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
அத்துடன், Nicolas Sarkozy ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Nicolas Sarkozy பிரான்ஸின் ஜனாதிபதியாக 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
இந்த நிலையில், Nicolas Sarkozy இற்கு எதிரான தனி நபர் குற்றவியல் வழக்கு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு லஞ்சம் வழங்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
இந்தநிலையில், பிரான்ஸில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது