மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

- Advertisement -

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான் ஆதரவாளர்கள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.

- Advertisement -

அண்மையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறித்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போராளிகள் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், சுமார் 22 பேர் வரை உயிரிழந்துள்ளதாக போர் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலில், ஈரான் போராளிகளுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz