மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தினால் பொருளாதாரத் தடை விதிப்பு!

- Advertisement -

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி திட்டத்தில் இருந்து மியன்மார் அரச மறுசீரமைப்பு செயற்றிட்டங்களுக்கான அனைத்து நேரடி நிதி உதவிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

எனினும், நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை இந்த பொருளாதாரத் தடை பாதிக்காது என, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் மேலும் இருவர் மீது அமெரிக்காவினால் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மியன்மாரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற மூவர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தபட்ட நாராங்கலை மலை..!

பதுளை மாவட்டத்தின் சொரணாத்தொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட Narangala மலையை சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாவாக்கலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்!

தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தலாவாக்கலை –...

யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Bernard lelarge யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாண...

தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரல்..!

இலங்கை கிரிகெட் அணி வீரர் தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது கிரிகெட் தொடருக்கான...

5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை நன்கொடையாக பெற்றுக் கொண்ட ஈரான்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கமைய,   நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுமென ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz