மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளங்கள் மீதான தடையை நீக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு!

- Advertisement -

அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளங்கள் மீதான தடையை நீக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய நிதி அமைச்சர் Josh Frydenberg தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தமது நாட்டு செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள பேஸ்புக், கூகிள் உள்ளிட்ட நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.

தமது தளத்துக்கும், வெளியீட்டாளர்களுக்கும் இடையிலான உறவை இந்த சட்டம் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக விமர்சித்த பேஸ்புக் நிறுவனம், செய்தி இணையத்தளங்களுக்கு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் சில நாட்களில் தடை விதிக்கப்பட்ட பக்கங்கள் அனைத்தும் மீள பார்வைக்கு விடப்படும் என, அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...

1000 ரூபா சம்பள விவகாரம் -ஆட்சேபனைகளை ஆராய கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என, சம்பள நிர்ணய சபையில்...

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் மனித உரிமை பேரவையில் இன்று

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம்...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில்  அது தொடர்பில்  ஆராய்வதற்கு...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில்  இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 2020 ஆம்...

Developed by: SEOGlitz