இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பிரச்சினையை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் 15 ஆம் திகதி இரண்டு தரப்புக்கும் இடயில் மோதல் ஏற்பட்டது.
குறித்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான அதிகாரமட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், BANGOK ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து, இரண்டு தரப்பினரும் தமது படைகளை மீளப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னெடுத்து வரும் முயற்சிகளை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.