ஈரானின் அணுசக்தி திட்டத்தினை கண்காணிப்பதற்கான காலஎல்லை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஈரானின் அணுசக்தி திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்புக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் குறித்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டது.
இதன்படி, குறித்த பொருளாதாரத்தடையினை அமெரிக்கா நீக்காமையினால் ஈரான் தமது அணுசக்தி திட்ட கொள்கையினை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.