அமெரிக்கா மீண்டும் களத்துக்கு வந்துள்ளதாக அந்த நாட்டு இராஜாங்க செயலாளர் அன்டன் பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கொரோனா தொற்று நெருக்கடி நிலைமை , காலநிலை மாற்றம் மற்றும் ஈரானுடனான அணுச்சக்தி ஒப்பந்தம் ஆகிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்று தொடர்பான ஆய்வில் சீனா குறைந்தளவான வௌிப்படைத் தன்மையையே வௌிப்படுத்தியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
சீனா கொரொனா தொற்று தொடர்பான தகவல்களை பகிரங்கமாக வௌிப்படுத்த முன்வர வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூறியுள்ளார்.