மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை முறித்துக்கொள்ளவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை?

- Advertisement -

தம் மீது பொருளாதாதாரத் தடைகளை விதிக்கும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை முறித்துக் கொள்ள தயாராகவுள்ளதாக, ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் Sergei Lavrov இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- Advertisement -

கைது செய்யப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னி விவகாரத்தில், ரஷ்யாவின் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.

அத்துடன், சில ஐரோப்பிய நாடுகளில் அலெக்ஸி நவால்னிக்கு ஆதராவாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில், ரஷ்யா தமது இராஜதந்திரிகள் சிலரை பதவியிலிருந்து நீக்கியிருந்தனர்.

எனினும், இந்த விடயத்தை  ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்திருந்தது.

இந்தப் பின்னணியிலேயே, தம் மீது பொருளாதாதாரத் தடைகளை விதிக்கும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை முறித்துக் கொள்ள தயாராகவுள்ளதாக  ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் அந்த நாட்டு ஊடகமொன்றுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz