மெய்ப்பொருள் காண்பது அறிவு

ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக செனட் சபை வாக்களிப்பு!

- Advertisement -

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக செனட் சபை வாக்களித்துள்ளது.

அரச பதவியில் இல்லாத தனிநபர் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்துவது அமெரிக்க அரசியலமைப்புக்கு முரணானது என டொனால்ட் ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் செனட் சபையில் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இதனை அடுத்து முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஆதரவாக 56 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய சாதாரண பெரும்பான்மையின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கியமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான இரண்டாவது நாடாளுமன்ற விசாரணைகள் இன்று முதல் அமெரிக்க செனட் சபையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை குற்றவாளியாக பெயரிடுவதற்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz