மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா உருவானதாக கருதப்படும் சீனாவின் ஆய்வுகூடத்துக்கு உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்கள் விஜயம்!

- Advertisement -

கொரோனா வைரஸ் உருவானதாக கருதப்படும் சீனாவின் வைரஸ் ஆய்வுகூடத்துக்கு உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்கள் விஜயம் செய்துள்ளனர்.

சீனாவின் வூஹான் மாநிலத்திலுள்ள Wuhan institute of virology எனப்படும் குறித்த ஆய்வுகூடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் உலகுக்கு பரவியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில், குறித்த ஆய்வுகூடத்துக்கு உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்கள் குழு இன்று விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சீனாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள, கொரோனா வைரஸ் உருவாக்கம் மற்றும் அதன் தாக்கம் குறித்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், குறித்த வைரஸ் ஆய்வுகூடத்தில் உலகின் மிக ஆபத்தான நோய்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அது குறித்த உண்மையான தகவல்களை கண்டறிய முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்றாகும் என சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz