கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிராக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி தடுப்பூசிகளுடன் 80 பேரை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய சீனாவின் பீஜிங், ஷங்காய் மற்றும் shandong ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலே குறித்த தடுப்பூசியினை தயார் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.