மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்ரியின் தலைவர் ஆங் கான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைமைகள் சிலர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன் ஒருவருட காலத்திற்கு அவசர நிலையினை பிரகடனப்படுத்தியது.
அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியன்மார் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இராணுவ ஆட்சி தொடருமானால் அமெரிக்கா மியன்மார் மீது மீண்டும் பொருளாதாரத் தடையினை விதிக்குமென தெரிவித்துள்ளது.
அத்துடன், இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.