AstraZeneca மற்றும் Oxford பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தடுப்பூசிக்கான அங்கீகாரம் தொடர்பில் எதிர்வரும் 29 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் 3ஆவது தடுப்பூசியாக இது அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 6 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.