மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

- Advertisement -
மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம் மூலம் மலேசிய பேரரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் முயாதீன் யாசீன் (வுயn ளுசi ஆராலனைனin லுயளளin) பேரரசரை பிழையாக வழிநடத்தியுள்ளதாக பீ.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பிரதமர், பதவி மோகத்தினால் இவ்வாறு பேரரசரை பிழையாக வழிநடாத்தி ஆட்சியில் நீடித்துக் கொள்ள சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றை மீளவும் கூட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் இந்த கோரிக்கை கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேரரசருக்கு எதிராக போராட்டங்களை நடாத்தவில்லை எனவும் அவசரகாலச் சட்டம் குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் தொடர்பில் பிரதமர் கூறியுள்ள நியாப்படுத்தல்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளை கட்படுத்தும் நோக்கில் அவசரகால நிலையை நீடித்து வருவதாக பிரதமர் யாசீன் கூறியுள்ளார்.
எனினும், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முடக்கவும், ஆட்சியில் தொடர்ந்தும் நீடித்துக் கொள்ளவும் பிரதமர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை  முழுமையாக ஒப்படைப்பதற்கு  சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம்...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் அதிரடியாக ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு...

Developed by: SEOGlitz