சர்வதேச ரீதியில் Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது.
இதன்பிரகாரம் தடுப்பூசி இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை விரைவு படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்று அனுமதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்கா ஜேர்மனிபிரித்தானியா கனடா உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலகளாவிய ரீதியில் Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசியின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.