அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரனைக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்
இதன்படி, 222 ஜனநாயக கட்சி உறுப்பினர்`களும், டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 10 பேரும், இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே அமெரிக்க ஜனாதிபதி மீது குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது
அமெரிக்க நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் தமது ஆதரவாளர்களை ஊக்குவித்தாக குற்றம் சுமத்தப்படுகின்றது,
எவ்வாறாயினும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்,
அத்துடன் பதவிக்காலத்தில் இரண்டு தடவைகள் குற்றப்பிரேரணையை சந்தித்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.