பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
20 வயதுடைய குறித்த நபர் அண்மைக் காலத்தில் எந்தவொரு நாட்டுக்கும் பயணித்திருக்கவில்லை என அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 99 இலட்சத்து 77 ஆயிரத்து 704 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.