அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் 20 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
எனினும், தற்போதுவரை 21 இலட்சம் பேருக்கு மாத்திரமே கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலில் இருந்து மீளெழுவதற்கான செயற்பாட்டில் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர், நாட்டை சரியான வழியில் வழிநடத்த தயாராக இருப்பதாகவும் ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.