சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகையை இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்த இந்தோனேசியா தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் குறித்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிய வகை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு உடன் அமுலாகும் வகையில் இந்தோனேசியா தடை விதித்துள்ளது.
எனினும், உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கு குறித்த பயணத்தடை பொருந்தாது என இந்தோனேசியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.