மெய்ப்பொருள் காண்பது அறிவு

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

- Advertisement -

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், Tigray பிராந்தியத்தை வெற்றி கொண்டுள்ளதாக எத்தியோப்பிய அரச படையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உண்மைத் தன்மை கிடையாது எனவும், மோதல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக குறித்த பிராந்தியத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின்போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என, எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த கூற்றையும் TPLF கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூநகரி பிரதேசத்தில் யுவதி வெட்டிப் படுகொலை : கணவர் கைது!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பூநகரி தெளிகரை பகுதியில் அமைந்துள்ள அவரது...

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஹட்டனில் பாரிய போராட்டம்…!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தயார் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிக்கின்றார். எனினும்,  கூட்டு ஒப்பந்தத்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில்,...

இலங்கை Vs இங்கிலாந்து : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்…!

மினுவங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுப்புதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுமா…?

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்தில் முதற்கட்ட தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, Oxford-AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவே ஆரம்பக்கட்ட ஆய்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி...

Developed by: SEOGlitz