மெய்ப்பொருள் காண்பது அறிவு

Armenia – Azerbaijan ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்!

- Advertisement -

Armenia மற்றும்  Azerbaijan ஆகிய நாடுகள் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

Ganja நகரில்  நேற்றைய தினம் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சர்ச்சைக்குரிய Nagorno-Karabakh  பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையில் கடந்த மாத இறுதியில் பயங்கர மோதல் ஆரம்பமானது.

இதற்கமைய, குறித்த இருதரப்பு இராணுவங்களும் கடுமையாக  தாக்குதல் நடத்திய நிலையில் நூற்றுக்கணக்கான வீரர்கள்  கொள்ளப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த நிலையில் கடந்த வாரம் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இருப்பினும்,  போர் நிறுத்தத்தை மீறி இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் Azerbaijan இன் 2ஆவது மிகப்பெரிய நகரமான Ganja நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது Armenia இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்,  30 இற்கும் மேற்பட்டவர்ககள் படுகாயம் அடைந்ததாகவும் அஜர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து  Armenia இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக  Armenia மற்றும்  Azerbaijan மோதல் தொடர்பாக நாளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

அலரி மாளிகையில் கொரோனா தொற்று? – பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த...

Developed by: SEOGlitz