மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மீது குற்றஞ்சாட்டிய ட்ரம்ப்!

- Advertisement -

சர்வதேச வளி மாசடைவுக்கு சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வடகரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், பரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்,  குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக,  சீனா, இந்தியா போன்ற நாடுகளே அதிக இலாபம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த நாடுகளின் நடவடிக்கையினால்,  அமெரிக்காவின் எண்ணெய், எரிவாயு மற்றும்  நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள் உற்பத்தித் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றத்தை தவிர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து,  2017ஆம் ஆண்டு  அமெரிக்கா வெளியேறியது.

இதேவேளை, அமெரிக்காவிலேயே சிறந்த சுற்றுச் சூழல் நிலவி வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேலியகொடை மீன் சந்தையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க!

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிள்ளதாக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசியலமைப்பில் மாற்றம்...

கட்சித் தாவும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் :

கட்சித் தாவும் எண்ணத்துடன் செயற்படுபவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு போதும் இடம் வழங்கப்படமாட்டாது என  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி  தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

எதிர்த்தரப்பு உறுப்பினர்களால் நாம் வெற்றிபெறவில்லை : வியோழேந்திரன்!

எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு காரணமாகவே 20 திருத்தம் வெற்றிபெற்றதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியோழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS · Viyalendran

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மீறுகின்றது : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த  நாடாளுமன்ற உறுப்பினர் முஜபுர் ரஹ்மான் இதனை...

Developed by: SEOGlitz