மெய்ப்பொருள் காண்பது அறிவு

அசர்பைஜானில் போர் நிறுத்தத்தை மீறி மோதல்!

- Advertisement -

ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு சில மணி நேரங்களில் Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஷெல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய படைகளுக்கிடையில் கடந்த இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வந்தன.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை Moscow இல் நடந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்திருந்தன.

இதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் கைதிகள் பரிமாற்றம் மற்றும் அண்மையில் நடாத்தப்பட்ட தாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை, Nagorno-Karabakh பிராந்தியத்தில்  கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz