மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்!

- Advertisement -

பிரான்ஸ் நாட்டின் பரீஸ்நகரில் ஆசிரியர் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பரீஸ்நகரின் வட மேற்கு பகுதியில்   அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதேவேளை சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற  பிரான்ஸ் ஜனாதிபதி   Emmanuel Macron குறித்த தாக்குதலானது ஐஎஸ்  பயங்கரவாதிகளினால்  நடாத்தப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு  கருத்து சுதந்திரம் தொடர்பிலான  கற்பித்தல்  நடவடிக்கைகளை முன்னெடுத்த ஆசிரியர்  ஒருவர்  இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதல்தாரி  பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே  பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நகரின் 9 நகரங்களை உள்ளடக்கிய வகையில் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரான்ஸில் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் பலர் வெளியேற்றம்!

முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 316 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட குறித்த அனைவரிடமுட் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என உறுதி...

கண்டியில் சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கண்டி கலஹா பகுதியில்  15 வயதுடைய  சிறுவன்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தனது தந்தையுடன் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை...

உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கமையவே இடம்பெறும்!

கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இன்று இடம்பெறவுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி  தெரிவித்துள்ளது. இலங்கையில் 16 வது கொரோனா  மரணம்   நேற்று பதிவானது. கொழும்பு தேசிய...

Developed by: SEOGlitz