தென்கொரியாவில் Haishen புயல் எச்சரிக்கையை அடுத்து 300 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளில் கடந்த வாரம் கடுமையான புயல் காற்று வீசியது
இதனையடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சுமார் இரண்டு லட்சம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த Haishen என்ற புயல் இன்று தென் கொரியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமையவே, தென்கொரியாவில் 10 விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சில ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், புயலின் நகர்வு காரணமாக கொரிய தீபகற்பத்தில் ஜேஜு தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியுள்ளதாகவும், இதனால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.