மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடைநிறுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்!

- Advertisement -

இடைநிறுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

AstraZeneca மற்றும்  Oxford  ஆகிய பல்கலைக்கழகங்களினால் உருவாக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி சோதனை நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டது.

- Advertisement -

இங்கிலாந்தில் கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக குறித்த தடுப்பூசி பரிசோதனை இடைநிறுத்தப்பட்டது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த தடுப்பு தடுப்பூசி பரிசோதனை பாதுகாப்பானது என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென பிரித்தானிய சுகாதார அமைச்சின் செயலாளர்  Matt Hancock  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  தடுப்பூசியை பாதுகாப்பாக வழங்கவுள்ள விஞ்ஞானிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுயாதீன பாதுகாப்பு மீளாய்வுக்குழு,  இங்கிலாந்தின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் ஒழுங்கமைப்பு நிறுவனம் ஆகியவற்றின் பரிந்துரைக்கு அமைய கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீள ஆரம்பிக்கப்படுமென Oxford  பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றித்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த  சட்டமூல வரைபிற்கு எதிராக மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த, மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 20  ஆவது அரசியலமைப்பு திருத்த...

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராயும் குழு நியமனம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த குழு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புவகேன அலுவிகாரே,...

Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

ஸ்கொட்லாந்தின் Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 600 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த மாணவர்களுள் 172 பேருக்கு...

உங்களுக்கு மாற்று யாரும் கிடையாது- டி. இமான்….

தமிழ் சினிமாவின் பாடகர் டி.இமான் "நாங்கள் அனைவரும் உங்களை இழக்கின்றோம்" என தனது ஆழ்ந்த இரக்கங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். We Miss You SPB Sir.#Annaatthe#RIPSPB pic.twitter.com/08gNLOsUsO — D.IMMAN (@immancomposer) September...

Developed by: SEOGlitz