மெய்ப்பொருள் காண்பது அறிவு

லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவம் தொடர்பில் FBI விசாரணைகள் முன்னெடுப்பு

- Advertisement -

லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவம் தொடர்பில்   FBI  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

லெபனான் மற்றும்  சர்வதேச புலனாய்வாளர்களுடன்,புலனாய்வு  விசாரணை கூட்டாட்சிப் பணியகம் என அழைக்கப்படும்   FBI     இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக லெபனான் ஜனாதிபதி Michel Aoun தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில்  சுமார் 172 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன்   சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும்  மேலும்   சுமார் 40  பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் துறைமுகத்தில் பாதுகாப்பற்ற  முறையில்  காணப்பட்ட  இரசாயன களஞ்சிய சாலை  கடந்த 4 ஆம் திகதி வெடித்து சிதறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு காரணமாகவே இரசாயன களஞ்சியசாலை வெடிப்புக்குள்ளானதாக    பொதுமக்கள குற்றம் சுமத்தியுள்ள நிலையில் ஆட்சியில் இருந்து வெளியேறுவதாக லெபனான் அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz