மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு – அமெரிக்க சுகாதார நிபுனர்கள் எச்சரிக்கை

- Advertisement -

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 552 ஆக உயர்வடைந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 285 உயிரிழப்புகள் பதிவாகியதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது

- Advertisement -

கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதலாவது உயிரிழப்பு பதிவாகியது

இதனை அடுத்து கடந்த 5 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது

மேலும் கடந்த வாரங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாத ஆரம்பத்திலும் பார்க்க அதிகளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

இந்த இறப்பு வீதம் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக அமெரிக்க சுகாதார நிபுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்குள்ளான 61 ஆயிரத்து 311 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 இலட்சத்தை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...